நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் அரசு மகளிர் கல்லுாரியில் முன்னாள் மாணவியர் சந்திப்பு
நாமக்கல்: நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் அரசு மகளிர் கலைக்கல்லுாரியில், முன்னாள் மாணவியர் சந்திப்பு நிகழ்ச்சி, நேற்று நடந்தது. கல்-லுாரி முதல்வர் கோவிந்தராசு தலைமை வகித்தார்.முன்னாள் மாணவியர் சங்க செயலாளரும், கணிதத்துறை பேராசி-ரியருமான செல்வி வரவேற்றார். ஓய்வு பெற்ற பேராசிரியர்கள் லீலா குளோரிபாய், தங்கம்மாள், வசந்தாமணி, கிரேட்டா மேரி தென்றல் ஆகியோர் வாழ்த்தி பேசினார்.கடந்த, 1972-75ம் ஆண்டுகளில், இக்கல்லுாரியில் இளநிலை பட்டப்படிப்பு படித்த மாணவியர் உமாராணி, காளியம்மாள், சுகு-ணாதேவி, ஜெயலட்சுமி ஆகியோர் பேசினர். 200க்கும் மேற்-பட்ட முன்னாள் மாணவியர், தங்கள் குடும்பத்துடன் பங்கேற்-றனர். தொடர்ந்து, தாங்கள் படித்த காலத்தில் நடந்த கல்லுாரி அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர்.முன்னாள் மாணவி கல்பனாவின் மதுரை விஸ்வா அம்ருநாதம் இசைக்குழுவினரின் இன்னிசை நிகழ்ச்சி நடந்தது.முன்னாள் மாணவியர் நடனமாடி உற்சாகப்படுத்தினர். முன்னாள் மாணவி வக்கீல் தமயந்தி, சங்க செயற்குழு உறுப்பினர் சுகன்யா, நிர்வாகிகள், உறுப்பினர்கள், பேராசிரியர்கள் உள்பட பலர் பங்-கேற்றனர்.