மேலும் செய்திகள்
பழைய இடத்தில் மருத்துவமனை கேட்டு ஆர்ப்பாட்டம்
01-Aug-2024
நாமக்கல்: நாமக்கல், அழகு நகரை சேர்ந்த பாலமணிகண்டன், 30, கட்டட மேஸ்திரி. இவர் கடந்த, 26ம் தேதி இரவு எருமப்பட்டியில் இருந்து, நாமக்கல் நோக்கி ஸ்கூட்டரில் சென்று கொண்டு இருந்தார். துாசூர் ஏரிக்கரை அருகே வந்தபோது, எதிரே வந்த பைக்கும், இவரது ஸ்கூட்டரும் மோதின. இந்த விபத்தில் பாலமணிகண்டன் பரிதாபமாக இறந்தார். இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் வந்த, அலங்காநத்தம் பகுதியை சேர்ந்த சர்வேஸ், 21, திவான், 16, ஆகிய இருவரும் படுகாயம் அடைந்தனர். இவர்கள் நாமக்கல்லில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சர்வேஸ் மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வந்த சர்வேஸ், நேற்று இறந்தார்.எனவே இந்த விபத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 2 ஆக அதிகரித்து உள்ளது. இது குறித்து நாமக்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
01-Aug-2024