உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / 100 நாள் வேலையில் ஒருதலைபட்சம் பி.டி.ஓ., ஆபீஸ் முற்றுகை போராட்டம்

100 நாள் வேலையில் ஒருதலைபட்சம் பி.டி.ஓ., ஆபீஸ் முற்றுகை போராட்டம்

மோகனுார்: மோகனுார் ஒன்றியத்தில் உள்ள, 25 கிராம பஞ்.,களில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி அளிப்பு திட்டம் செயல்படுத்-தப்படுகிறது.இந்த திட்டத்தில் ஒருவருக்கு, 100 நாட்கள் வேலை வழங்கப்-படும். அதன்படி, பேட்டப்பாளையம் பஞ்சாயத்தில், 500க்கும் மேற்பட்டோருக்கு அட்டை வழங்கப்பட்டுள்ளது. அவர்களை, இரண்டு கிளஸ்டராக பிரிக்கப்பட்டு, வேலைவாய்ப்பு வழங்கப்ப-டுகிறது.இந்நிலையில், ஒரு கிளஸ்டரை சேர்ந்தவர்களுக்கு மட்டுமே பணி வழங்கப்படுவதாகவும் மற்றொரு கிளஸ்டரை சேர்ந்தவர்-களை புறக்கணிப்பதாகவும் புகார் எழுந்தது. இதனால், அதிர்ச்சி அடைந்த பணியாளர்கள், 70க்கும் மேற்பட்டோர், நேற்று காலை, 11:00 மணிக்கு, மோகனுார் பி.டி.ஓ., அலுவலகத்தை முற்றுகை-யிட்டு, தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.மோகனுார் போலீசார், பி.டி.ஓ., கீதா பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, 'மக்கள் நலப்பணியாளர், தொடர்ந்து, தனக்கு வேண்-டியப்பட்டவர்களுக்கு பணி வாய்ப்பு வழங்குகிறார். எங்களுக்கு பணி ஒதுக்குவதில்லை. அவரை மாற்ற வேண்டும்' என்றனர். அவரை மாற்றி தொடர்ந்து பணி வழங்குவதாக உறுதியளித்ததை-யடுத்து, போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை