உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / பி.ஏ.சி.பி., உறுப்பினர்களுக்கு இட்டு வைப்பு தொகை வழங்கல்

பி.ஏ.சி.பி., உறுப்பினர்களுக்கு இட்டு வைப்பு தொகை வழங்கல்

திருச்செங்கோடு: திருச்செங்கோடு சரகத்தில் செயல்பட்டு வரும் கோக்கலை தொடக்க வேளாண் கடன் சங்கத்தில், நடந்துள்ள முறைகேடுகள் தொடர்பாக, துறை ரீதியான விசாரணை மேற்கொள்ளப்பட்டது. விசாரணை முடிந்த நிலையில், சங்கத்தில் இட்டு வைப்பு செய்துள்ள உறுப்பினர்களுக்கு, இட்டு வைப்பு தொகை வழங்கும் பணியை மேற்கொள்ள குழு அமைக்கப்பட்டது. இதையடுத்து, உறுப்பினர்களுக்கு இட்டு வைப்பு தொகை வழங்கும் நிகழ்ச்சி, நேற்று நடந்தது. கூட்டுறவு சங்கங்களின் நாமக்கல் மண்டல இணைப்பதிவாளர் அருளரசு தலைமை வகித்து, உறுப்பினர்களுக்கு இட்டு வைப்பு தொகை வழங்கும் பணியை துவக்கி வைத்தார். கூட்டுறவுத்துறை அலுவலர்கள், வாடிக்கையாளர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை