உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்தினால் அபராதம்

பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்தினால் அபராதம்

ப.வேலுார்;ப.வேலுார் சுற்றுவட்டார பகுதிகளில், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்வோருக்கு எதிராக, அபராதம் உள்பட கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என டவுன் பஞ்சாயத்து செயல் அலுவலர் திருநாவுக்கரசு தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்ட அறிக்கை:தமிழ்நாடு அரசால் சுற்றுச்சூழல் (பாதுகாப்பு) சட்டம் 1986, பிரிவு- 5ன் கீழ் 1.1.2019 முதல் தமிழ்நாடு முழுவதும் ஒருமுறை பயன்படுத்தப்பட்டு, துாக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்களை தயாரித்தல், சேமித்து வைத்தல், வினியோகித்தல், விற்பனை செய்தல் மற்றும் உபயோகித்தல் ஆகியவற்றிற்கு முற்றிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது.ப.வேலுாரில் பிளாஸ்டிக் கவர், டம்ளர் உள்பட பிளாஸ்டிக் உற்பத்தி பொருட்கள் விற்கவும், பயன்படுத்தவும் தடை விதிக்கப்பட்டபோதும், அவை தாராளமாக பயன்பாட்டில் உள்ளன. அவற்றை முற்றிலுமாக தடை செய்யும் வகையில் டவுன் பஞ்சாயத்து நிர்வாகம் களம் இறங்கியுள்ளது. அதன்படி, தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்வோருக்கு முதல் முறை, 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும். அதன் பிறகு விதி மீறப்பட்டால், 25 ஆயிரம் முதல் 50 ஆயிரம் ரூபாய் வரை அபராதம் விதிக்கவும், சம்பந்தப்பட்ட கடைகளின் லைசென்ஸ், கட்டட எண் ரத்து செய்யப்படும்.இவ்வாறு தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை