உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / காவிரி கரைபுரண்டும் களை கட்டாத ஆடிப்பெருக்கு ஆற்றில் குளிக்க விதிக்கப்பட்ட தடையால் மக்கள் ஏமாற்றம்

காவிரி கரைபுரண்டும் களை கட்டாத ஆடிப்பெருக்கு ஆற்றில் குளிக்க விதிக்கப்பட்ட தடையால் மக்கள் ஏமாற்றம்

நாமக்கல்: காவிரியில் புனித நீராட தடை விதிக்கப்பட்டதால், மோகனுார் உள்ளிட்ட காவிரி கரையோரங்களில், ஆடிப்பெருக்கு விழா களை-யிழந்து காணப்பட்டது.நாமக்கல் மாவட்ட காவிரிக்கரையோர பகுதிகளான, மோகனுார், ப.வேலுார், ஜேடர்பாளையம், பள்ளிப்பாளையம், குமாரபாளையம் உள்ளிட்ட பகுதிகளில், ஆடிப்பெருக்கு விழா கோலாகலமாக கொண்டாடப்படுவது வழக்கம். அன்றைய தினம், கூட்டம் கூட்டமாக காவிரி ஆற்றுக்கு வரும் மக்கள், புது-மண தம்பதியர் ஆற்றில் புனித நீராடுவர். தற்போது மேட்டூர் அணை நிரம்பி, 1.10 லட்சம் கன அடி உபரி நீர் காவிரி ஆற்றில் திறக்கப்பட்டுள்ளதால், ஆடிப்பெருக்கு தினமான நேற்று, காவிரி ஆற்றில் புனித நீராட, மாவட்ட நிர்-வாகம் சார்பில் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் மோகனுார் உள்ளிட்ட காவிரி கரையோரங்களில், நேற்று புனித நீராட வந்த மக்கள், புதுமண தம்பதியர் ஏமாற்றத்துடன் திரும்பினர். ஆடிப்-பெருக்கு விழாவும் களையிழந்தது.இடைப்பாடியில்...ஆடிப்பெருக்கில் காவிரி கரையின் அனைத்து இடங்களிலும் மக்கள், குல தெய்வ சிலைகள், கத்தி, மணி, அரிவாள் உள்ளிட்ட-வற்றை சுத்தம் செய்து அவற்றுக்கு பூஜை செய்தும் வழிபடுவது வழக்கம். இதற்காக சேலம் மாவட்டம் கல்வடங்கம், கோனேரிப்-பட்டி, பூலாம்பட்டி ஆகிய காவிரி கரையோரங்களில் ஏராளமான மக்கள் கூடுவர்.ஆனால் இந்த ஆண்டு காவிரியாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெ-ருக்கால், காவிரி கரையோரங்களில் குளிக்க தடை விதிக்கப்பட்டி-ருந்தது. இதனால் கல்வடங்கம் உள்ளிட்ட காவிரி கரையோர பகு-திகள் நேற்று வெறிச்சோடின.அதேநேரம் அரசு சார்பில் அனுமதிக்கப்பட்டிருந்த பில்லுக்கு-றிச்சியில், மேட்டூர் அணையின் கிழக்குக்கரை வாய்க்காலில் குறைந்த அளவில் மக்கள் நீராடி ஆடிப்பெருக்கை கொண்டா-டினர். மேலும் குல தெய்வ சிலைகள், கத்தி, மணி, அரிவாள் உள்ளிட்டவற்றை சுத்தம் செய்தும் அவற்றுக்கு பூஜை செய்தும் வழிபட்டனர்.மேட்டூரில்...ஆண்டுதோறும் ஆடிப்பெருக்கில், சேலம் உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து மக்கள், மேட்டூர் வந்து காவிரியாற்றில் நீராடி வழிபடுவர். ஆனால் நடப்பாண்டு, மேட்டூர் அணை நிரம்பி உபரிநீர் திறப்பால், அசம்பாவிதத்தை தவிர்க்க, ஆடிப்பெ-ருக்கான நேற்று, காவிரியாற்றில் பல்வேறு பகுதிகளில் நீராட, மாவட்ட நிர்வாகம் தடை விதித்தது.குறிப்பாக மக்கள் அதிகளவில் நீராடும் மட்டம் பகுதி, கொளத்துார் நீரேற்று நிலையம், எம்.ஜி.ஆர்., பால அடிவாரம் ஆகிய இடங்களில் தடை விதித்து போலீஸ் பாதுகாப்பு போடப்-பட்டது. இதனால் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்த மக்கள், அணை அடிவாரம் உள்ள விநாயகர் கோவில் படித்துறை, எம்.ஜி.ஆர்., பாலம் முனியப்பன் கோவில் அருகிலுள்ள படித்து-றைக்கு மட்டும் சென்று நீராட அனுமதிக்கப்பட்டனர். மேட்டூர் கிழக்கு, மேற்கு கால்வாயில் நீராடவும் தடை விதிக்கப்பட்டது. மக்கள் நீராட அனுமதிக்கப்பட்ட இடங்களில் தீயணைப்பு, மீட்பு குழுவினர் கயிறு கட்டியும், பைபர் படகில் சென்றும் ரோந்து பணியில் ஈடுபட்டனர். இதனால் வழக்கம்போல் காவி-ரியில் நீராட வந்த மக்கள் பலர் ஏமாற்றத்துடன் திரும்பினர். அதேநேரம் வழக்கமானதை விட, மூன்றில் ஒரு பங்கு மக்கள் மட்டுமே நேற்று மேட்டூர் வந்தனர். ஒர்க்ஷாப் கார்னர், காவிரி பாலம், அணை பூங்கா முன்பகுதி உள்ளிட்ட முக்கிய பகுதிகள் கூட்டமின்றி வெறிச்சோடின.உபரி நீர் திறப்பு குறைப்புமேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டியதால், கடந்த ஜூலை, 30ம் தேதி முதல், உபரிநீர் வெளியேற்றப்பட்டது. நேற்று முன்தினம் வினாடிக்கு, 1.70 லட்சம் கன அடி நீர் வந்தது. இதில் பாசனத்துக்கு, 21,500 கனஅடி போக, 1.48 லட்சம் கன அடி உபரிநீர், 16 கண் மதகு வழியே வெளியேற்றப்பட்டது. இந்-நிலையில் கர்நாடகா அணைகளின் உபரிநீர் திறப்பு படிப்படியாக குறையத்தொடங்கியது. நேற்று முன்தினம் இரவு, 1.10 லட்சம் கன அடியாக இருந்த நிலையில், 70,000 கன அடியாக நேற்று மாலை குறைந்தது. அதற்கேற்ப, 16 கண் மதகில், உபரி நீர் திறப்பு, 48,500 கன அடியாக குறைக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ