உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / பிளஸ் 2 ஆசிரியர்களுக்கு 2 நாள் புத்தாக்க பயிற்சி

பிளஸ் 2 ஆசிரியர்களுக்கு 2 நாள் புத்தாக்க பயிற்சி

நாமக்கல், பிளஸ் 1, பிளஸ் 2 ஆசிரியர்களுக்கு, 2 நாள் புத்தாக்க பயிற்சி, நாமக்கல்லில், நேற்று தொடங்கியது. சேலம் மண்டல அண்ணா நிர்வாக பணியாளர்கள் கல்லுாரி சார்பில், நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த பிளஸ் 1, பிளஸ் 2 ஆசிரியர்களுக்கு, 2 நாள் புத்தாக்க பயிற்சி வழங்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. முதல் நாள் பயிற்சி, நேற்று தொடங்கியது. இதில், உதவி கணக்கு அலுவலர் சங்கரலிங்கம் பயிற்சியை ஒருங்கிணைத்தார். ஆசிரியர்களுக்கு பயிற்சியில் மன அழுத்தத்தை தவிர்ப்பது, யோகா பயிற்சி, உணவு மேலாண்மை, தலைமை பண்பு, மாணவர்களிடம் முன்மாதிரியாக மாறுவது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. 53 ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். இன்று 2வது நாள் பயிற்சி நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை