மேலும் செய்திகள்
2,500 கோவில்களுக்கு திருப்பணி நிதியுதவி
15-Aug-2024
கூட்டுறவு சர்க்கரை ஆலைநிர்வாகத்தை கண்டித்து போராட்டம்நாமக்கல், செப். 6-மோகனுார், சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலை நிர்வாகத்தை கண்டித்து போராட்டம் நடத்தப்படும் என, விவசாயிகள் சங்கம் அறிவித்துள்ளது.இது குறித்து, உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின், தமிழக விவசாயிகள் சங்கத் தலைவர் வேலுசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: நாமக்கல் மற்றும் சேலம் மாவட்ட விவசாயிகள், பயிரிட்டுள்ள பதிவு இல்லாத கரும்பை, தனியார் ஆலைக்கு வெட்ட கடந்த வாரம் மோகனுார் சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலை தடை விதித்தது. இத்தடையை உடனடியாக நீக்காவிட்டால், மோகனுார் சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலை நிர்வாகத்தை கண்டித்து போராட்டம் நடத்துவோம். இவ்வாறு தெரிவித்துள்ளார்.
15-Aug-2024