உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / வெள்ள பாதிப்பு நிவாரண பணி அலுவலர்களுடன் ஆய்வு கூட்டம்

வெள்ள பாதிப்பு நிவாரண பணி அலுவலர்களுடன் ஆய்வு கூட்டம்

பள்ளிப்பாளையம், பள்ளிப்பாளையம் யூனியன் அலுவலகத்தில் உள்ள கூட்டரங்கில், நேற்று நாமக்கல் மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், சிறுபான்மையினர் நலத்துறை இயக்குனருமான ஆசியா மரியம், மாவட்ட கலெக்டர் உமா ஆகியோர் தலைமையில், மாவட்ட எஸ்.பி., ராஜேஸ்கண்ணன் முன்னிலையில், வெள்ள பாதிப்புகள் மற்றும் நிவாரண பணிகள் குறித்து, அனைத்து துறை அலுவலர்களுடன் ஆய்வு கூட்டம் நடந்தது.இது குறித்து, சிறுபான்மையினர் நலத்துறை இயக்குனர் ஆசியா மரியம் கூறியதாவது:முகாமில் தங்கியுள்ள மக்களுக்கு தேவையான உணவு, மருத்துவ வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. வெள்ளத்தால் சூழ்ந்த பகுதியில் பொதுமக்கள், இளைஞர்கள் செல்ல இயலாத வகையில் தடுப்புகள் அமைக்கப்பட்டு, காவல் துறை, தீயணைப்பு துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், தீயணைப்பு வீரர்கள் தயார் நிலையில் உள்ளனர். அனைத்து துறை அலுவலர்களும், பொதுமக்கள் பாதுகாப்பை உறுதி செய்திடும் வகையில் பணியாற்றிட வேண்டும்.இவ்வாறு கூறினார்.மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் வடிவேல், திருச்செங்கோடு ஆர்.டிஓ., சுகந்தி மற்றும் பல்வேறு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை