உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / நங்காஞ்சி ஆற்றில் கழிவுகள் கொட்டுவதால் தொற்று அபாயம்

நங்காஞ்சி ஆற்றில் கழிவுகள் கொட்டுவதால் தொற்று அபாயம்

அரவக்குறிச்சி: பள்ளப்பட்டி அருகே, நங்காஞ்சி ஆற்றுப்பாலம் அண்ணா நகர் பகுதியில் அமைந்துள்ளது. பள்ளப்பட்டியில் இருந்து வெளியூர் செல்லும் மக்கள், இப்பாலத்தை உபயோகித்து வருகின்றனர். இப்பாலத்தில் இறைச்சி கழிவு பொருட்களை, மூட்டையாக கொண்டு வந்து வீசி விட்டு செல்கின்றனர். மேலும் மருத்துவ கழிவுகள், நகராட்சியில் சேகரிக்கப்படும் கழிவுகள் உள்ளிட்டவைகளை பாலத்தின் அடியில் சேகரித்து வைக்கின்றனர். இதனால் இப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் சேகரித்த கழிவுகளை, தீயிட்டு எரிப்பதால் சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயமும் உள்ளது. எனவே, ஆற்றில் கழிவுகள் கொட்டுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்