உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / மழை வேண்டி சிறப்பு தொழுகை

மழை வேண்டி சிறப்பு தொழுகை

ப.வேலுார்:அக்னி நட்சத்திரம் தொடங்கியதால், வெயில் தாக்கம் மேலும் அதிகரித்தது. வரும், 28 வரை வெயில் தாக்கம் அதிகரித்து காணப்படும்.இந்நிலையில் மழை வேண்டி, ப.வேலுார் ஜகன்வழி தர்கா பள்ளிவாசலில், முத்தவல்லி சவான் சாகிப் தலைமையில் சிறப்பு தொழுகை, நேற்று நடந்தது. இந்த சிறப்பு தொழுகையில், ப.வேலுார், பரமத்தி, பாண்டமங்கலம், பாலப்பட்டி மோகனுார், கரூர் மாவட்ட உலமாக்கள் மற்றும் ஜமாத்தார்கள், 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.சிறப்பு தொழுகைக்கான ஏற்பாடுகளை, ப.வேலுார் ஜகன்வழி தர்கா பள்ளிவாசல் டிரஸ்ட் உறுப்பினர்கள் முபாரக்உல்லா, சலீம், ஹாஜி இப்ராஹிம் ஆகியோர் செய்திருந்தனர். செயலாளர் இக்பால் நன்றி கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை