உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / 1,760 தனியார் பள்ளி வாகனங்கள் ஆய்வு:பள்ளி கல்வித்துறை செயலாளர் தகவல்

1,760 தனியார் பள்ளி வாகனங்கள் ஆய்வு:பள்ளி கல்வித்துறை செயலாளர் தகவல்

நாமக்கல்;நாமக்கல்லில், 1,760 தனியார் பள்ளி வாகனங்களை ஆய்வு செய்ய உள்ளதாக பள்ளி கல்வித்துறை அரசு செயலாளர் குமரகுருபரன் தெரிவித்தார். நாமக்கல் வடக்கு, தெற்கு வட்டார போக்குவரத்து அலுவலக எல்லைக்குட்பட்ட பள்ளி வாகனங்களை, பள்ளி கல்வித்துறை அரசு செயலாளர் குமரகுருபரன், கலெக்டர் உமா ஆகியோர் வருடாந்திர ஆய்வு பணியை பார்வையிட்டனர். ஆய்வின் போது, வாகனங்களின் பாதுகாப்பு மற்றும் கட்டமைப்பு, தகுதி வாய்ந்த ஓட்டுனர், நடத்துனர், மாணவ, மாணவிகள் ஏறும், இறங்கும் வழிகளில் உறுதியான கதவுகள், படிக்கட்டுகள் அமைக்கப்பட்டுள்ளதா, பள்ளி வாகனங்களில் மஞ்சள் நிறம், உரிய மருந்துகளுடன் கூடிய முதலுதவி பெட்டி, வேக கட்டுப்பாட்டுக்கருவி, தீயணைப்பு கருவி உள்ளதா என்று ஆய்வு மேற்கொண்டனர்.மேலும், பள்ளி வாகன சிறப்பு சட்டத்தில் கூறப்பட்டுள்ள விதிகள் பின்பற்றப்பட்டுள்ளதா என்றும், தகுதிச்சான்று, அனுமதி சீட்டு, காப்புச்சான்று, புகைச்சான்று, வரி மற்றும் பசுமை வரி ஆகியவை நடப்பில் உள்ளதா என்றும் அரசு செயலாளர் குமரகுருபரன் ஆய்வு செய்தார்.மேலும் பள்ளி வாகன ஓட்டுனர்கள், வாகன பொறுப்பாளர்களுக்கு தீயணைப்பு துறையினரால் வாகனத்தில் உள்ள தீயணைப்பு கருவியை, அவசர காலத்தில் எவ்வாறு கையாள்வது என்று செய்முறை விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது. அப்போது மாவட்டத்தில் உள்ள, 1,760 பள்ளி வாகனங்களும் பள்ளி திறப்பதற்கு முன்பு ஆய்வு செய்யப்படவுள்ளது. டி.ஆர்.ஓ., சுமன், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் வடிவேல், சி.இ.ஓ., மகேஸ்வரி, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை