உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / ஜல்லி, எம்.சாண்ட் விலை எகிறியது ரூ.5,000 கோடி அரசு பணி பாதிப்பு

ஜல்லி, எம்.சாண்ட் விலை எகிறியது ரூ.5,000 கோடி அரசு பணி பாதிப்பு

நாமக்கல்: “ஜல்லி, எம்.சாண்ட் விலை 100 சதவீதம் உயர்வால் 5,000 கோடி ரூபாய் மதிப்பிலான அரசு கட்டுமான பணிகள் தமிழகத்தில் பாதிக்கப்பட்டுள்ளன,” என, இந்திய கட்டுநர் சங்க மாநில தலைவர் பழனிவேல், அகில இந்திய தலைவர் விஸ்வநாதன், நாமக்கல் மைய தலைவர் தென்னரசு கூறினர்.நாமக்கல்லில் மூவரும் கூட்டாக நேற்று அளித்த பேட்டி:கட்டுமானத்தில் மூலப்பொருட்களாக திகழும் ஜல்லி, எம்.சாண்ட் விலை, 100 சதவீதம் அதிகரித்துள்ளது. இதனால், நடப்பாண்டு மார்ச்சுக்குள் முடிக்க வேண்டிய அரசின் கட்டுமான பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில், 5,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன. இந்தாண்டு முடிக்க வேண்டிய அரசின் கட்டுமான பணிகள், அடுத்தாண்டுக்கு கொண்டு சென்றால், அரசுக்கு மிகப்பெரிய இழப்பு ஏற்படும். இப்பிரச்னைகளுக்கு முதல்வர் ஸ்டாலின், தனிக்கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், தமிழகத்தில் அதிகமான குவாரி, கிரஷர்களை இயக்க அனுமதியும், தற்போது செயல்படும் குவாரிகளில், அதிகளவில் ஜல்லி, எம்.சாண்ட், பி.சாண்ட் எடுக்க அனுமதியும் அளிக்க வேண்டும். அவ்வாறு அனுமதி அளித்தால் மட்டுமே விலை குறையும். தஞ்சை, புதுக்கோட்டை மாவட்டங்களில் அரசு கட்டுமான பணிகளை, ஒப்பந்ததாரர்கள் நிறுத்தியுள்ளனர். இவ்வாறு கூறினர்.

எகிறிய விலை விபரம்

பிப்., 1ம் தேதி முக்கால் ஜல்லி 1 யூனிட், 3,000 ரூபாயில் இருந்தது. தற்போது, 6,000 ரூபாயாக உயர்ந்துள்ளது. அதேபோல், எம்.சாண்ட் 1 யூனிட், 4,000 ரூபாயில் இருந்து, 8,000 ரூபாயாக அதிகரித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை