உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / தடுப்பு சுவரில் டூவீலர் மோதி வாலிபர் பலி

தடுப்பு சுவரில் டூவீலர் மோதி வாலிபர் பலி

‍புதுச்சத்திரம்:புதுச்சத்திரம் அருகே, எஸ்.நாட்டாமங்கலத்தை சேர்ந் தவர் கிஷோர் சங்கர், 22; தனி யார் நிறுவன தொழிலாளி. இவரது ஊரில் மாரியம்மன் கோவில் திருவிழா நடந்தது. திருவிழாவின் கடைசி நாளான, ‍நேற்று முன்தினம் இரவு, ஆடல் பாடல் நிகழ்ச்சி நடந்துள்ளது. இதை கண்டு கழித்த கார்த்திக், 28, சரண் ராஜ், 34, கிஷோர் சங்கர் ஆகிய, மூவரும் டூவீலரில், பொன்குறிச்சி பைபாஸ் ரோடு, ஆர்.குமார பாளையம் அருகே சென்று கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக சாலையில் இருந்த தடுப்பு சுவரில் டூவீலர் மோதியது. இந்த விபத்தில் கார்த்திக், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மற்ற, 2 பேரும் படுகாயங்களுடன், சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். புதுச்சத்திரம் போலீசார் விசா ரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை