உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / டூவீலர் திருடியவர் கைது

டூவீலர் திருடியவர் கைது

வெண்ணந்துார்: வெண்ணந்துார் சுற்றுவட்டார பகுதியில் கடந்த சில வாரங்களாக, வீட்டின் முன் நிறுத்தியிருந்த டூவீலரை மர்ம நபர்கள் திருடும் சம்பவம் அதிகரித்து வந்தது.இதுகுறித்து, அப்பகுதி மக்கள் வெண்ணந்துார் போலீசில் புகாரளித்தனர். போலீசார், அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர். அதில், ஒருவர் டூ-வீலரை திருடிச் செல்வது தெரியவந்தது. தொடர்ந்து நடத்திய விசாரணையில், சேலம் மாவட்டம், ஆத்துார் அடுத்த கருமந்துறை தாழ் வீதியை சேர்ந்த வாசுதேவன் மகன் அருண்குமார், 27, என்பது தெரியவந்தது. இதையடுத்து, அருண்குமாரை, வெண்ணந்துார் போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ