உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / நீர், மோர் பந்தல் திறப்பு

நீர், மோர் பந்தல் திறப்பு

ப.வேலுார்: ப.வேலுாரில், தி.மு.க., நகர செயலாளர் முருகன், மாணவர் அணி அமைப்பாளர் மகிழ் பிரபாகரன் சார்பில், ப.வேலுார் பஸ் ஸ்டாண்ட் மற்றும் சுல்தான்பேட்டையிலும் நீர், மோர் பந்தல், நேற்று திறக்கப்பட்டது.வெயிலின் தாக்கத்திலிருந்து பொது மக்களை காக்கும் வகையில், பல்வேறு சமூக ஆர்வலர்களாலும், அரசியல் கட்சியினராலும் ஆங்காங்கே நீர், மோர் பந்தல் துவங்கி பொதுமக்களுக்கு குடிநீர், மோர், பழங்கள், இளநீர், குளிர்பானங்கள் ஆகியவற்றை மக்களுக்கு இலவசமாக வழங்கி வருகின்றன.இதன் தொடர்ச்சியாக, ப.வேலுார் பஸ் ஸ்டாண்ட் மற்றும் சுல்தான்பேட்டையில், நாமக்கல் தி.மு.க., மேற்கு மாவட்ட செயலாளர் மதுரா செந்தில், நீர், மோர் பந்தலை, நேற்று திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் பரமத்தி ஒன்றிய செயலாளர் தன்ராஜ், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் சுந்தர், தலைமை பொதுக்குழு உறுப்பினர் சாமிநாதன், ப.வேலுார் டவுன் பஞ்., தலைவர் லட்சுமி ஆகியோர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி