உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / பெரிய மணலியில் பயணிகள் நிழற்கூடம் அமைக்கப்படுமா?

பெரிய மணலியில் பயணிகள் நிழற்கூடம் அமைக்கப்படுமா?

எலச்சிபாளையம்;பெரியமணலி பஸ் நிறுத்தத்தில் பயணிகள் நிழற்கூடம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.எலச்சிபாளையம் அடுத்த, பெரியமணலி கிராமத்தில், 1,000க்கும் அதிகமான குடியிருப்பில் மக்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள பஸ் நிறுத்தம் வழியாக தினமும் நாமக்கல், திருச்செங்கோடு, ராசிபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு மாணவர்களும், பொதுமக்களும் பள்ளி, கல்லுாரிகளுக்கும், பல்வேறு பணிகளுக்கும், இதர தேவைகளுக்கும் சென்று வருகின்றனர். இதுவரை பஸ் நிறுத்தத்தில் பயணிகள் நிழற்கூடம் அமைக்கப்படவில்லை. வெயிலின் தாக்கம் தாங்க முடியாமல் மக்கள் சிரமத்திற்கு ஆளாகின்றனர். எனவே, பயணிகள் நிழற்கூடம் அமைக்க சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை