உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / புதன்சந்தை மாட்டுச்சந்தை வளாகத்தில் அடிப்படை வசதி செய்து தரப்படுமா?

புதன்சந்தை மாட்டுச்சந்தை வளாகத்தில் அடிப்படை வசதி செய்து தரப்படுமா?

சேந்தமங்கலம்:புதன்சந்தையில் உள்ள, மாட்டுச்சந்தை வளாகத்தில் அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க வேண்டும் என, வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். நாமக்கல், சேலம் ரோட்டில் வினைதீர்த்தபுரத்தில், 100 ஆண்டுக்கும் மேலாக வாரந்தோறும் புதன்கிழமை நாட்களில் மாட்டுச்சந்தை நடந்தது. இங்கு புதன்கிழமை சந்தை தொடர்து நடந்ததால், இந்த பகுதிக்கு புதன்சந்தை என பெயர் வந்தது. புதுச்சத்திரம் யூனியன் கட்டுப்பாட்டில் உள்ள சந்தையை, அதிகாரிகள் செவ்வாய்கிழமைக்கு மாற்றிய நிலையில், இந்த சந்தைக்கு தமிழகம், கேரளா, ஆந்திரா மாநிலங்களில் இருந்து ஏராளமான வியாபாரிகள், திங்கட்கிழமை இரவே புதன்சந்தைக்கு வந்து விடுகின்றனர்.அதிகாலை 4:00 மணிக்கு துவங்கும் மாட்டுச்சந்தைக்கு, நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் இருந்து, ஏராளமானோர் மாடுகளை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். 1 மாட்டிற்கு சுங்க கட்டணம், 60 ரூபாய் வசூல் செய்யப்படும் நிலையில், சந்தைக்கு வருவோருக்கு கழிப்பிடம், மின்விளக்கு உள்ளிட்ட எந்தவிதமான அடிப்படை வசதிகளும் யூனியன் நிர்வாகத்தால் செய்து கொடுக்கவில்லை. ஆண்டுக்கு குத்தகை ஏலமாக, 80 லட்சம் கொடுக்கும் இந்த சந்தைக்கு அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க வேண்டும் என வியாபாரிகள், விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.இது குறித்து வியாபாரிகள் கூறியதாவது: வாரந்தோறும் செவ்வாய்கிழமை நடக்கும் இந்த சந்தைக்கு, மாடுகளை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். சந்தையில் சுங்க கட்டணம் மட்டும் வசூல் செய்கின்றனர்.ஆனால், மின் விளக்கு, கழிப்பிடம் உள்ளிட்ட எந்த அடிப்படை வசதிகளும் இல்லை, பல முறை அதிகாரிகளிடம் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை, எனவே, கலெக்டர் சந்தையை ஆய்வு செய்து அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை