உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / வட்டார வள பயிற்றுனர் குழுவில் இடம் மகளிர் குழு பெண்கள் விண்ணப்பிக்கலாம்

வட்டார வள பயிற்றுனர் குழுவில் இடம் மகளிர் குழு பெண்கள் விண்ணப்பிக்கலாம்

நாமக்கல்: நாமக்கல் கலெக்டர் உமா வெளியிட்ட அறிக்கை:தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கூடுகை மற்றும் கூட்டாண்மை, நிறுவனங்களை வலுப்படுத்துதல், திறன் வளர்ப்பு மற்றும் நிதி உள்ளாக்கம் ஆகிய அலகுகளின் கீழ் செயல்படும், வட்டார அளவிலான கூட்டமைப்புகள், பஞ்., அள-விலான கூட்டமைப்புகள், சமுதாய வள பயிற்றுனர்கள் மற்றும் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு பயிற்சி அளிக்க வட்டார வள பயிற்றுனர் குழு பட்டியலில் சேர்ந்திட தகுதியான சுய உதவிக்-குழு உறுப்பினர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படு-கின்றன.ஒவ்வொரு வட்டாரத்திலும், மூன்று வட்டார வளப்பயிற்றுனர் பட்டியல் தயாரிக்கப்பட்டு, அப்பட்டியலில் உள்ளவர்களுக்கு பல்-வேறு பிரிவுகளில் பயிற்சி அளிக்கப்பட்டு, அவர்கள் பயிற்றுனர்க-ளாக ஈடுபடுத்தப்படுவர். இவர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்-முக தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படுவர்.சுய உதவிக்குழுவில் உறுப்பினராக உள்ள பெண்களுக்கு முன்-னுரிமை அளிக்கப்படும். கடந்த, மார்ச், 1ல், 25 வயது முதல், 45 வயதுக்குட்பட்டவராக இருக்க வேண்டும். ஏதேனும் ஒரு பட்ட படிப்பில் தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும்.வட்டார அளவிலான கூட்டமைப்பு, பஞ்., அளவிலான கூட்-டமைப்பில், 2-3 ஆண்டுகள் பணிபுரிந்த முன் அனுபவமுள்ளவ-ராக இருக்க வேண்டும்.விண்ணப்பிக்க விரும்பும் பெண்கள், வரும், 21 மாலை, 5:00 மணிக்குள், 'மாவட்ட இயக்க மேலாண் அலகு, இரண்டாம் தளம், நாமக்கல் கலெக்டர் கூடுதல் வளாகம், நாமக்கல்' என்ற முகவரி அல்லது ஒவ்வொரு வட்டாரத்திலும் உள்ள வட்டார இயக்க மேலாண் அலகில் நேரிலோ அல்லது தபால் மூலமா-கவோ சுய விபரம் அடங்கிய ஆவண நகலுடன் விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ