உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / உலக ஓசோன் பாதுகாப்பு தினம் சைக்கிள் பேரணிக்கு அழைப்பு

உலக ஓசோன் பாதுகாப்பு தினம் சைக்கிள் பேரணிக்கு அழைப்பு

நாமக்கல்: 'உலக ஓசோன் பாதுகாப்பு தினத்தையொட்டி, நாளை, நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில், விழிப்புணர்வு சைக்கிள் பேரணி நடக்கிறது. சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், மாணவ, மாண-வியர், பொதுமக்கள் பங்கேற்கலாம்' என, கலெக்டர் உமா தெரி-வித்துள்ளார்.இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை:உலக ஓசோன் பாதுகாப்பு தினம், ஆண்டுதோறும், செப்., 16ல் கொண்டாடப்படுகிறது. ஓசோன் அடுக்கு பூமியை சூரியனின் தீவிரமான புற ஊதா கதிர்களில் இருந்து பாதுகாக்கும் முக்கிய பங்காற்றுகிறது. இதனால், உலகின் பல பகுதிகளில் முக்கியமாக சுற்றுச்சூழல் மற்றும் மனித உடல்நலம் மீது உள்ள பாதிப்பை குறைக்க உதவுகிறது. ஓசோன் அடுக்கு மனிதனால் வெளியிடப்-படும் சில ரசாயன பொருட்களால் பாதிக்கப்படுகிறது. இந்த ரசா-யனங்கள், வளிமண்டலத்திற்கு சென்று ஓசோன் மூலக்கூறுகளை உடைத்து, அதன் அடுக்கை குறைக்கின்றன. அதனால், அதிக-மான புற ஊதா கதிர்கள் நேரடியாக பூமியை தாக்குகின்றன.புவி வெப்பமடைதலுக்கு பங்களிக்கும் வாயுக்களில் ஒன்றான கார்பன் டை ஆக்சைடை மரங்கள் உறிஞ்சுகின்றன. மரங்களை நடுவது, மாசுபாட்டை குறைக்க உதவுகிறது, இது ஓசோன் பட-லத்தின் பாதுகாப்பை மறைமுகமாக ஆதரிக்கிறது.இதுகுறித்து, மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், நாளை (செப்., 16) காலை, 8:00 மணிக்கு, வனத்-துறை சார்பில், நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் சைக்கிள் பேரணி நடக்கிறது. அதில், சுற்றுச்சூழல் அலுவலர்கள், மாணவ, மாணவியர், பொதுமக்கள் பங்கேற்கலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை