உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / அரசு கலை கல்லுாரியில் சேர 10 ஆயிரம் பேர் விண்ணப்பம்

அரசு கலை கல்லுாரியில் சேர 10 ஆயிரம் பேர் விண்ணப்பம்

ராசிபுரம் ராசிபுரம் அரசு கலைக்கல்லுாரியில், 1,200 இடங்களுக்கு, 10 ஆயிரம் பேர் ஆர்வத்துடன் விண்ணப்பித்துள்ளனர். ராசிபுரம் ஆண்டகலுார்கேட்டில், திருவள்ளுவர் அரசு கலைக்கல்லுாரி உள்ளது. இளங்கலை மாணவர்கள் சேர்க்கைக்கான கலந்தாய்வு கடந்த, 2ம் தேதி தொடங்கி, 14ம் தேதி வரை நடக்கவுள்ளது. முதல் மூன்று நாட்கள் மாற்றுத்திறனாளிகள், விளையாட்டு வீரர்கள், என்.சி.சி., ராணுவ வீரர்களின் வாரிசுகள் உள்பட சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு நடந்தது. இதில், 20 மாணவர்களுக்கு சேர்க்கை வழங்கப்பட்டுள்ளது. நேற்று தமிழ், ஆங்கிலம் உள்ளிட்ட சில துறைகளுக்கான மாணவர் கலந்தாய்வு நடந்தது. நேற்று, 232 மாணவர்கள் சேர்க்கை பெற்றுள்ளனர். ஆங்கில பாடப்பிரிவுகளுக்கும், தாவரவியல், கம்ப்யூட்டர் பாடப்பிரிவுகளுக்கும் வரும் நாட்களில் கலந்தாய்வு நடக்கிறது.இது குறித்து கல்லுாரி முதல்வர் சிவக்குமார் கூறுகையில்,'' கல்லுாரியில் அனைத்து துறைகளிலும், மாணவர்கள் விரும்பி சேர்ந்து வருகின்றனர். இளங்கலையில், 1,115 இடங்களுக்கு, 10 ஆயிரம் மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். இவர்களுக்கான கலந்தாய்வு நடந்து வருகிறது,'' என்றார்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை