மேலும் செய்திகள்
மாவட்ட ஜூடோ போட்டி 150 மாணவியர் பங்கேற்பு
20-Aug-2025
நாமக்கல் நாமக்கல்லில் நடந்த முதல்வர் கோப்பைக்கான, இரண்டாம் நாள் விளையாட்டு போட்டிகளில் 1,500 மாணவியர் பங்கேற்றனர்.முதல்வர் கோப்பைக்கான விளையாட்டு போட்டி, நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் கடந்த 26ம் தேதி தொடங்கி நடந்து வருகிறது. போட்டிகளில் பங்கேற்க 47,253 பேர் பதிவு செய்துள்ளனர். பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவியருக்கு தனித்தனியாகவும், பொதுமக்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு தனியாகவும் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் 2-வது நாளான நேற்று பள்ளி, கல்லுாரி மாணவியருக்கு கால்பந்து, சிலம்பம், கைப்பந்து, இறகுபந்து, ஹாக்கி ஆகிய போட்டிகள் நடத்தப்பட்டன. மாவட்ட விளையாட்டு அலுவலர் கோகிலா தொடங்கி வைத்தார். மாவட்டம் முழுவதும் இருந்து, 1,500-க்கும் மேற்பட்ட மாணவியர் பங்கேற்றனர்.
20-Aug-2025