உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / ரூ.17.51 லட்சம் மோசடி செய்து மிரட்டல்தி.மு.க., முன்னாள் நிர்வாகி மீது வழக்கு

ரூ.17.51 லட்சம் மோசடி செய்து மிரட்டல்தி.மு.க., முன்னாள் நிர்வாகி மீது வழக்கு

ரூ.17.51 லட்சம் மோசடி செய்து மிரட்டல்தி.மு.க., முன்னாள் நிர்வாகி மீது வழக்குநாமக்கல்:அரிசி குருணை வாங்கி, 17.51 லட்சம் ரூபாய் மோசடி செய்து கொலை மிரட்டல் விடுத்த, நாமக்கல் மாவட்ட பஞ்சாயத்து, தி.மு.க., முன்னாள் துணைத்தலைவர் மீது, போலீசார் வழக்குப்பதிந்து, தலைமறைவாக உள்ள அவரை தேடி வருகின்றனர்.நாமக்கல் - திருச்செங்கோடு சாலையில், பச்சையம்மன் டிரேடர்ஸ் என்ற பெயரில், அரிசி குருணை வியாபாரம் செய்து வருபவர் சசிகுமார், 53. நாமக்கல் அடுத்த காதப்பள்ளியை சேர்ந்த, மாவட்ட பஞ்சாயத்து முன்னாள் துணைத்தலைவர் செந்தில்குமார், 54. இவர், கோழி தீவன வியாபாரம் செய்து வருகிறார்.கடந்த, 2024 அக்., 11ல், செந்தில்குமார், சசிகுமாரிடம் கடனுக்கு குருணை அரிசி கேட்டுள்ளார். அதற்கு சசிகுமார், 'கடனுக்கு வியாபாரம் செய்வது இல்லை' என, கூறியுள்ளார். அதை தொடர்ந்து, லோடு இறக்கியவுடன் பணம் தருவதாக கூறியுள்ளார்.இதை நம்பி, 10 லோடு குருணை அரிசி அனுப்பியுள்ளார். கடைசியாக, நான்கு லோடு இறக்கிய பின், மூன்று நாட்கள் வங்கி விடுமுறை என்றும், அதற்குண்டான, 17 லட்சத்து, 51,365 ரூபாயை ரொக்கமாக தந்து விடுகிறேன் என, செந்தில்குமார் கூறியுள்ளார். ஆனாலும், மூன்று மாதமாகியும் பணத்தை கொடுக்கவில்லை.சசிக்குமார் அடிக்கடி பணம் கேட்டு தொந்தரவு செய்ததால், நான்கு காசோலைகளை, செந்தில்குமார் கொடுத்துள்ளார். அதில், இரண்டு காசோலைகளை சசிக்குமார் கலெக்சனுக்கு போட்டுள்ளார். ஆனால், வங்கி அலுவலர்கள், 'ஸ்டாப் பேமென்ட்' கொடுத்திருப்பதால், பணத்தை வழங்க இயலாது என, தெரிவித்துள்ளனர்.இதுகுறித்து சசிகுமார் அளித்த புகார்படி, நாமக்கல் போலீசார், செந்தில்குமார் மீது வழக்குப்பதிந்து, தலைமறைவாக உள்ள அவரை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி