பத்தாம் வகுப்பில் 19வது இடம்
நாமக்கல், நாமக்கல் கலெக்டர் உமா கூறியதாவது: பத் தாம் வகுப்பு பொதுத்தேர்வு, கடந்த, மார்ச், 28ல் தொடங்கி, ஏப்., 15ல் முடிந்தது. அதற்கான தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. நாமக்கல் மாவட்டத்தில், 295 பள்ளிகளை சேர்ந்த, 9,821 மாணவர், 8,943 மாணவியர் என, மொத்தம், 18,764 பேர் தேர்வு எழுதினர். இதில், 9,107 மாணவர், 8,629 மாணவியர் என, மொத்தம், 17,736 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்கள், 92.73 சதவீ தம், மாணவியர், 96.49 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ள னர். இது, 94.52 சதவீதமாகும். இதன் மூலம், மாநில அளவில், 19ம் இடம் பிடித்துள்ளது. கடந்தாண்டை விட, 1.01 சதவீதம் கூடுதலாக பெற்றுள்ளது.