| ADDED : மே 24, 2024 06:55 AM
மோகனூர் : மோகனுார் அருகே என்.புதுப்பட்டி மேலராஜவீதியை சேர்ந்தவர் அருள், 57. இவர் கோவையில் கம்பெனி வைத்துள்ளார். கடந்த ஏப்., 20ம் தேதி இரவு என்.புதுப்பட்டியில் உள்ள தன் வீட்டு படுக்கை அறையில் துாங்கியுள்ளார். மறுநாள் பார்த்த போது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது, கப்போர்டில் வைக்கப்பட்டிருந்த நான்கரை பவுன் தங்க செயின் ஒன்று, 1.2 லட்சம் ரூபாய் திருட்டு போனது தெரிய வந்தது.மோகனுார் இன்ஸ்பெக்டர் சவீதா 'சிசிடிவி' கேமரா மூலம் விசாரணை நடத்தினார். குறிப்பிட்ட சமயத்தில் அவ்வழியாக வந்தவர்களை விசாரித்ததில், தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு புது அக்ரகாரத்தை சேர்ந்த கார் டிரைவர் கார்த்திக் என்ற செல்வ கார்த்திக், 39, அவரது நண்பர் சரவணன் (எ) சரவண பாபு, 34, என தெரியவந்தது. இவர்கள் இருவரும் அருள் வீட்டில் திருடியதை ஒப்புக்கொண்டனர். அவர்களிடம் இருந்து நகையை மீட்ட போலீசார், இருவரையும் கைது செய்து சிறைக்கு அனுப்பினர்.