உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / வடமாநிலத்தவரிடம் பணம் பறித்த 2 பேர் கைது

வடமாநிலத்தவரிடம் பணம் பறித்த 2 பேர் கைது

பள்ளிப்பாளையம், மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்தவர் நேபாள்ராய், 31, பிசால்பர்மன், 21, ரஞ்சித்பர்மன், 38; இவர்கள் மூவரும், கடந்த, 17ல் சேலம் ரயில்வே ஸ்டேஷன் வந்துள்ளனர். அங்கிருந்து புதிய பஸ் ஸ்டாண்டிற்கு சென்று காத்திருந்தனர். அப்போது, அங்கு வந்த ஐந்து பேர், பள்ளிப்பாளையத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி, மூவரையும் காரில் ஏற்றிச் சென்றனர். அவர்களை, பள்ளிப்பாளையம் அருகே, கொக்கராயன்பேட்டை அடுத்த அம்மாசி பாளையம் காட்டுப்பகுதி யில் உள்ள ஒரு வீட்டில் அடைத்து வைத்து பணம் பறித்துள்ளனர். இதுகுறித்து தகவலறிந்த மொளசி போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று அம்மாசிபாளையம் பகுதியை சேர்ந்த அர்த்தனாரி, 48, மோகன்ராஜ், 37, ஆகிய இரண்டு பேரை கைது செய்தனர். தப்பி ஓடி தலைமறைவாக இருந்த ரவிகுமார், 34, சீனிவாசன், 43, ஆகிய இரண்டு பேரை, மொளசி போலீசார் நேற்று இரவு கைது செய்தனர். தொடர்ந்து தலைமறைவாக உள்ள மற்றொருவரை போலீசார் தேடி வருகின்றனர். பாதிக்கப்பட்ட வடமாநில தொழிலாளர்களை, நேற்று முன்தினம் இரவு, சொந்த ஊருக்கு போலீசார் பாதுகாப்பாக அனுப்பி வைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை