உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / மது விற்ற 2 பேர் கைது

மது விற்ற 2 பேர் கைது

நாமக்கல், வெண்ணந்துார் அடுத்த நடுப்பட்டி டாஸ்மாக் கடை அருகே பார் நடத்தி வருபவர் கிருஷ்ணன், 46; இவர், டாஸ்மாக் கடைகளில் இருந்து குறைந்த விலைக்கு மது பாட்டில்களை வாங்கி, அதிக விலைக்கு விற்பனை செய்வதாக, நாமக்கல் மதுவிலக்கு போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து, இன்ஸ்பெக்டர் சங்கரபாண்டியன், எஸ்.ஐ., செல்லத்துரை தலைமையிலான போலீசார், அந்த பாரில் நேற்று ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, 47 மதுபாட்டில்கள் விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. அதையடுத்து பார் உரிமையாளர் கிருஷ்ணன், அங்கு பணியாற்றி வந்த மணிகண்டன், 48, ஆகிய, இருவரையும் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ