மேலும் செய்திகள்
தீபாவளியை முன்னிட்டுவரும் 5, 6ல் ரேஷன் சப்ளை
01-Oct-2025
நாமக்கல், 'தாயுமானவர் திட்டத்தில், இன்று தொடங்கி, இரண்டு நாட்களுக்கு, முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் வீடுகளுக்கே சென்று அத்தியாவசிய பொருட்கள் வினியோகம் செய்யப்படுகிறது' என, நாமக்கல் கலெக்டர் துர்கா மூர்த்தி தெரிவித்துள்ளார்.இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை:நாமக்கல் மாவட்டத்தில், தமிழக முதல்வரின், 'தாயுமானவர்' திட்டத்தில், 70 வயதிற்கு மேற்பட்ட முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் இல்லத்திற்கே நேரில் சென்று, அத்தியாவசிய பொருட்கள், ஒவ்வொரு மாதமும், இரண்டாவது சனி, ஞாயிறு ஆகிய நாட்களில் வினியோகம் செய்யப்படுகிறது. அதன்படி, இம்மாதத்திற்கு, நாளை (இன்று) தொடங்கி, இரண்டு நாட்கள் பயனாளிகளின் வீடுகளுக்கே சென்று, அத்தியாவசிய பொருட்கள் வினியோகம் செய்யப்படுகிறது. முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் இத்திட்டத்தை பயன்படுத்திக்கொள்ளலாம்.இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
01-Oct-2025