மேலும் செய்திகள்
லாட்டரி விற்றவர் கைது
26-Jul-2025
ப.வேலுார், ப.வேலுார் அருகே, நன்செய் இடையாறு, அனிச்சம்பாளையம் பகுதிகளில் லாட்டரி சீட்டு விற்பதாக, போலீசாருக்கு தகவல் வந்தது. டி.எஸ்.பி., சங்கீதா உத்தரவுப்படி, எஸ்.ஐ., சீனிவாசன் தலைமையில் போலீசார், நன்செய் இடையாறு, அனிச்சம்பாளையம் பகுதிகளில் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.அப்போது, நன்செய் இடையாறு மாரியம்மன் கோவில் அருகே, தடை செய்யப்பட்ட வெளிமாநில லாட்டரி சீட்டுகளை விற்றுக்கொண்டிருந்த அதே பகுதியை சேர்ந்த தேவன், 48, குமரேசன், 72, ஆகிய இருவரையும் கைது செய்து, லாட்டரி சீட்டுகளை ப.வேலுார் போலீசார் பறிமுதல் செய்தனர். அனிச்சம்பாளையம் பகுதியில் லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்தவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
26-Jul-2025