உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / ஓட்டலில் லிப்ட் பழுது சிக்கி தவித்த 2 பேர் மீட்பு

ஓட்டலில் லிப்ட் பழுது சிக்கி தவித்த 2 பேர் மீட்பு

நாமக்கல், நாமக்கல்-திருச்சி சாலையில் தனியார் ஓட்டல் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த ஓட்டலின், முதல் தளத்திற்கு அங்கு பணிபுரியும் குஜராத் மாநிலத்தை சேர்ந்த ஹரேஷ், 34, ஓட்டலில் சாப்பிட வந்த துத்திகுளத்தை சேர்ந்த அசோக்குமார், 42, ஆகியோர், மாலை, 6:00 மணிக்கு லிப்டில் சென்றுள்ளனர். அப்போது, திடீரென லிப்டில் உள்ள சேப்டி பின் உடைந்ததால், இருவரும் லிப்டில் அரை மணி நேரம் சிக்கிக்கொண்டனர். இந்த சம்பவம் குறித்து, ஓட்டலில் பணிபுரியும் நபர்கள், நாமக்கல் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.நாமக்கல் தீயணைப்பு நிலைய உதவி மாவட்ட அலுவலர் தவமணி தலைமையில், தீயணைப்பு குழுவினர் அங்கு விரைந்து வந்து, ஹைட்ராலிக் உபகரணங்களை கொண்டு லிப்டை துாக்கி அதில் சிக்கிகொண்ட அசோக்குமார், ஹரேஷ் ஆகிய இருவரையும் உயிருடன் பத்திரமாக மீட்டனர். இதனால், சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை