உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / பொட்டிரெட்டிப்பட்டியில் 20 நாட்டுக்கோழி திருட்டு

பொட்டிரெட்டிப்பட்டியில் 20 நாட்டுக்கோழி திருட்டு

எருமப்பட்டி, எருமப்பட்டி அருகே, பொட்டிரெட் டிப்பட்டியை சேர்ந்தவர் தியாகராஜன், 53; விவசாயி. இவரது தோட்டம், புதுக்கோட்டை செல்லும் சாலையில் உள்ளது. இங்கு விவசாயி தியாகராஜன், 40க்கும் மேற்பட்ட நாட்டுக்கோழிகளை வளர்த்து வருகிறார். இந்த கோழிகளை அடைக்க, தோட்டத்தில் ஓட்டு கொட்டகை அமைக்கப்பட்டுள்ளது. தியாகராஜன் மாலையில் வீட்டிற்கு செல்லும்போது, கொட்டகையில் கோழிகளை அடைத்துவிட்டு செல் வது வழக்கம். இதேபோல், நேற்று முன்தினம் இ‍ரவு, தியாகராஜன் கோழி களை அடைத்துவிட்டு வீட்டிற்கு சென்றார். நேற்று காலை வந்து பார்த்தபோது, கொட்டகையின் ஓடுகளை பிரித்து இறங்கிய மர்ம நபர்கள், 20 நாட்டுக்கோழிகளை பிடித் துச்சென்றனர். இதுகுறித்து, தியாகராஜன் அளித்த புகார்படி, எருமப்பட்டி போலீசார், கோழி திருடனை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ