உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / வெறிநாய் கடித்த 20 பேருக்கு சிகிச்சை

வெறிநாய் கடித்த 20 பேருக்கு சிகிச்சை

பள்ளிப்பாளையம்: பள்ளிப்பாளையம் அடுத்த காந்திபுரம், 5,6ம் வீதிகளில் வெறிநாய் தொல்லை சில நாட்களாக அதிகரித்து காணப்பட்டது. இந்நிலையில், நேற்று காலை வெறிபிடித்த நாய் ஒன்று, சாலையில் சென்றவர்களை துரத்தி துரத்தி கடித்து குதறியது. இதில், பள்ளிப்பாளையம் நகராட்சி துாய்மை பணியாளருக்கு கைவிரல் மிகவும் பாதிக்கப்பட்டு, ஈரோடு தனியார் மருத்துவம-னையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதேபோல், 20க்கும் மேற்-பட்டோரை வெறிநாய் கடித்தது. இவர்கள், பள்ளிப்பாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். இதனால், அப்பகு-தியில் பரபரப்பு ஏற்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ