மேலும் செய்திகள்
கொப்பரை கிலோ ரூ.139க்கு விற்பனை
29-Nov-2024
நாமகிரிப்பேட்டை, டிச. 17-நாமகிரிப்பேட்டை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், கடந்தாண்டு முதல் முறையாக, 2.5 டன் மிளகு விற்பனை செய்யப்பட்டுள்ளது. விவசாயிகள் தங்களது விளைபொருட்களை நியாயமான விலையில் சந்தைப்படுத்தவும், உரிய விலை பெறவும் தமிழகம் முழுவதும், 21 விற்பனைக்குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவைகளின் கட்டுப்பாட்டில், 227 ஒழுங்குமுறை விற்பனை கூடங்கள் உள்ளன. இவைகள் மூலம் விவசாயிகளின் உற்பத்தி பொருட்களை கமிஷன் இன்றி விற்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், விற்பனை கூடங்களிலேயே சேமிப்பு கிடங்கு, விவசாய பொருட்களை அடமானம் வைத்து பொருளீட்டு கடன் பெறும் வசதி ஆகியவை உள்ளது. பா.ஜ., பொறுப்பேற்ற பின் ஒழுங்குமுறை கூடங்களை நவீனமாக்க தொடங்கியது. 'இ.நாம்' திட்டம் மூலம் ஒரு பகுதியில் உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் இருந்து, 'ஆன்லைன்' மூலம் இந்தியாவில் எந்த ஒரு இடத்தில் இருந்தும் வியாபாரிகள் வேளாண் பொருட்களை ஏல முறையில் வாங்கும் வசதியை கொண்டு வந்தது. இதையடுத்து ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் அறிவிக்கப்பட்ட வேளாண் பொருட்கள் மட்டுமின்றி அறிவிக்கப்படாத வேளாண் பொருட்களையும் ஏலம் மூலம் விற்க தொடங்கினர். நாமகிரிப்பேட்டை வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நெல், நிலக்கடலை, சோளம், கம்பு, ராகி, எள், ஆமணக்கு, புளி, மிளகாய், கரும்பு வெல்லம், தேங்காய், மஞ்சள், உளுந்து ஆகியவை அறிவிக்கப்பட்ட வேளாண் பொருட்களாகும். ஆனால், கடந்த, 2022 நவ., மாதத்தில் இருந்து இ.நாம் திட்டம் இங்கு செயல்பட தொடங்கியது. இதையடுத்து முதல் முறையாக கடந்த ஆண்டு, கொல்லிமலையில் விளையும் மிளகை முதல் முறையாக, 'இ.நாம்' மூலம் விற்பனைக்கு கொண்டு வந்தனர். கடந்தாண்டு, 2.5 டன் மிளகு, 14 லட்சம் ரூபாய்க்கு விற்பனையாகி உள்ளது. இந்தாண்டு, கொல்லிமலையில் விலையும் காபி கொட்டையையும், 'இ.நாம்' ஏலத்தில் கொண்டுவர அதிகாரிகள் முயற்சி மேற்கொண்டுள்ளனர்.
29-Nov-2024