மேலும் செய்திகள்
இரட்டிப்பு பண மோசடி வீட்டை மக்கள் முற்றுகை
28-Jun-2025
வீட்டில் 20 கோடியை தேடி வந்த கொள்ளை கும்பல்
17-Jun-2025 | 1
மல்லசமுத்திரம் ஜூலைமல்லசமுத்திரம் அருகே, மேல்முகம் பஞ்.,க்குட்பட்ட, அத்தப்பம்பட்டி பூசாரிக்காட்டை சேர்ந்தவர் சதீஷ், 47; விவசாயி. இவர், அரசு அனுமதி பெற்று, இவருடைய தோட்டத்தில், கடந்த, 2013 முதல் ஒன்றரை ஏக்கர் பரப்பளவில், 500க்கும் மேற்பட்ட வெண்பன்றிகள் வளர்த்து வருகிறார். கேரளா மாநிலம், எர்ணாகுளத்தில் உள்ள நிறுவனத்திற்கு விற்பனை செய்து வருகிறார். இந்நிலையில், நேற்று முன்தினம் பராமரிப்பு பணிகளை முடித்துக்கொண்டு வேலையாட்கள் வீட்டுக்கு சென்று விட்டனர். மாலை, 5:00 மணியளவில் தோட்டத்தில் உள்ள பண்ணைக்கு திடீரென வந்த மர்ம விலங்கு, 28 வெண்பன்றிகளை கடித்து குதறியது. சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து பார்த்தனர். அப்போது, 28 பன்றிகள் பலியாகி கிடந்தது தெரியவந்தது. தகவலறிந்து வந்த கால்நடைத்துறை மருத்துவர்கள், பரிசோதனை செய்து தோட்டத்திலேயே குழி தோண்டி புதைத்தனர்.இதேபோல், கடந்த, எட்டு மாதத்திற்கு முன் அதே பகுதியை சேர்ந்த கணேசன், 66, என்பவரின் தோட்டத்தில் வளர்த்து வந்த, 16 செம்மறி ஆடுகளை, மர்ம விலங்கு கடித்து குதறியது. இதனால், இப்பகுதியில் கால்நடைகளை வளர்ப்பது மிகுந்த அச்சமாக உள்ளது என அப்பகுதி விவசாயிகள் தெரிவித்தனர்.
28-Jun-2025
17-Jun-2025 | 1