வழக்கில் ஆஜராகாத 3 பேர் தேடப்படும் குற்றவாளிகள்
குமாரபாளையம், குமாரபாளையம் பகுதியில்குற்றச்சம்பவத்தில் ஈடுபட்டு வழக்குப்பதிவு செய்யப்பட்ட மூவர், நீதிமன்றத்தில் ஆஜராகாததால், தேடப்படும் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.இதுகுறித்து, குமாரபாளையம் இன்ஸ்பெக்டர் தவமணி கூறியதாவது: திருட்டு வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராகாத, கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை நடுப்பட்டி கிராமத்தை சேர்ந்த ராமகிருஷ்ணன், 25, நாய்க்கன்புதுார் வெங்கடேசன், 27, மாரியப்பன், 23, ஆகிய மூவரும், நாமக்கல் மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றம், தேடப்பட்டு வரும் குற்றவாளி என அறிவித்துள்ளது. மேலும், இவர்கள் மூவரும், ஜூன், 23க்குள் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.