மேலும் செய்திகள்
கேன்டீன் ஊழியரை தாக்கியவர் கைது
10-Jul-2025
பள்ளிப்பாளையம், பள்ளிப்பாளையம் அருகே, சமயங்கிலி அடுத்த தொட்டிபாளையம் புதுார் பகுதியை சேர்ந்தவர் விஜயகுமார், 45; இவர் தன் தோட்டத்து பண்ணையில் உயர் ரக நாட்டுக்கோழிகள் வளர்த்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு, வெறிநாய்கள் பண்ணைக்குள் புகுந்து நாட்டுக்கோழிகளை கடித்து குதறின. இதில், 34 உயர்ரக நாட்டுக்கோழிகள் இறந்தன.இதுகுறித்து விஜயகுமார் கூறியதாவது: தோட்டத்து பண்னையில் உயர்ரக நாட்டுக்கோழிகளை வளர்த்து வருகிறேன். வெறிநாய்கள் புகுந்து, கோழியை கடித்து குதறியதில், 34 நாட்டுக்கோழிகள் இறந்தன. இதன்மதிப்பு, 70,000 ரூபாய் இருக்ககும். வருவாய்த்துறை அதிகாரிகள், கால்நடை உதவி ஆய்வாளர் ஆகியோர் ஆய்வு நடத்தினர். இப்பகுதியில் வெறிநாய்கள் அதிகளவில் உள்ளன. இதனால் ஆடு, கோழிகளுக்கு பாதுகாப்பு இல்லை. வெறிநாய்களை பிடிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், இழப்பீடு வழங்க, கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.
10-Jul-2025