மேலும் செய்திகள்
வீட்டின் கதவை உடைத்து ரூ.1.30 லட்சம் திருட்டு
10-Feb-2025
நாமக்கல்,: நாமக்கல் அடுத்த துாசூரை சேர்ந்த கதிர்வேல் மனைவி காமாட்சி, 65; இவர், நேற்று அதிகாலை, 4:00 மணிக்கு வீட்டிலிருந்து வெளியே வந்துள்ளார்.அப்போது, அங்கு மறைந்திருந்த மர்ம நபர், திடீரென பாய்ந்து மூதாட்டியின் வாயை பொத்தி, பின்பக்கம் உள்ள மாட்டு கொட்டகைக்கு இழுத்து சென்றார்.அங்கு அவர் கழுத்தில் அணிந்திருந்த, ஐந்து பவுன் தாலிச்சங்கிலியை பறித்துக்கொண்டு மர்ம நபர் தப்பி ஓடினார். அதிர்ச்சியடைந்த காமாட்சி, 'திருடன் திருடன்' என, சத்தமிட்டுள்ளார். அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் திரண்டு வந்தனர்.ஆனால், முள் காடாக இருப்பதால், மர்ம நபர் தப்பிச்சென்று தலைமறைவானார். மர்ம நபர், சட்டை அணியாமல் குண்டாக இருந்ததாக தெரிவித்தார்.இதுகுறித்து புகார்படி, நாமக்கல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம், அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
10-Feb-2025