உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / மர்ம நோய்க்கு 7 பசுக்கள் பாதிப்பு விவசாயிக்கு ரூ.5 லட்சம் இழப்பு

மர்ம நோய்க்கு 7 பசுக்கள் பாதிப்பு விவசாயிக்கு ரூ.5 லட்சம் இழப்பு

மோகனுார்: மோகனுார், ராசிபாளையம், உரம்புரையார் தோட்டத்தை சேர்ந்-தவர் விவசாயி சுப்ரமணி, 55. இவர், 10 உயர் ரக பசு மாடுகள் வளர்த்து வருகிறார். நேற்று முன்தினம் மாலை, 4:00 மணிக்கு, நான்கு பசு மாடுகள் திடீரென மயங்கி விழுந்தன. அதிர்ச்சிய-டைந்த சுப்ரமணி, கால்நடை மருத்துவரை அழைத்து சிகிச்சை அளித்தார். இருந்தும், ஒரு மாடு இறந்தது. நேற்று மூன்று பசு மாடுகள், கீழே விழுந்து உயிருக்கு போராடின. மொத்தம், ஏழு மாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. அதில் ஒன்று இறந்துள்ளது.நாமக்கல் கால்நடை துறை இணை இயக்குனர் மாரியப்பன், நாமக்கல் கால்நடை நோய் புலனாய்வு பிரிவு உதவி இயக்குனர் ராஜேந்திரன் தலைமையிலான குழுவினர், மோகனுார் கால்நடை உதவி மருத்துவர் காளிமுத்து ஆகியோர், சம்பவ இடத்திற்கு சென்று, மாடுகளின் ரத்தம், தீவனங்களை எடுத்து பரிசோத-னைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து, விவசாயி சுப்ரமணி கூறுகையில், ''ஒரு பசுவின் விலை, 70,000 ரூபாய். ஏழு மாடுகளில், ஆறு கறவை மாடுகள், ஒரு சினை மாடு. இவற்றின் மூலம், ஐந்து லட்சம் ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. அரசு இழப்பீடு வழங்க வேண்டும்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை