விசைத்தறி கூடங்களுக்கு 7 நாள் பொங்கல் விடுமுறை
பள்ளிப்பாளையம்: பள்ளிப்பாளையம் பகுதியில் விசைத்தறி முக்கிய தொழிலாக உள்ளது. நேரடியாகவும், மறைமுகமாகவும், 50,000க்கும் மேற்பட்டோர் வேலை செய்து வருகின்றனர்.பொங்கல் பண்டிகையையொட்டி, 7 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது என, பள்ளிப்பாளையம் நேருநகர் பகுதியை சேர்ந்த விசைத்தறி உரிமையாளர் தெரிவித்தார்.மேலும் அவர் கூறுகையில், 'தீபாவளிக்கு பின் தொழில் எதிர்பார்த்தளவு இல்லை. விற்பனை மந்தம், உற்பத்தி பாதிப்பு, ஜவுளி தேக்கம் போன்றவற்றால் தொழிலில் நெருக்கடி ஏற்பட்டு, தொய்வு நிலையில் உள்ளது.வழக்கமாக பொங்கல் பண்டிகைக்கு, மூன்று நாட்கள் மட்டுமே விடுமுறை அளிப்பது வழக்கம். தற்போது தொழிலில் மந்தம் காரணமாக, பொங்கலுக்கு, 7 நாள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது' என்றார்.