உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / 102, 108 ஆம்புலன்சில் பணிபுரிய 7 பேர் தேர்வு

102, 108 ஆம்புலன்சில் பணிபுரிய 7 பேர் தேர்வு

நாமக்கல்: அவசர கால ஆம்புலன்ஸ் வாகனங்களாகன, '102'ல் சுகாதார ஆலோசனை அதிகாரியாகவும், '108'ல் மருத்துவ உதவியாளராகவும் பணிபுரிய வேலைவாய்ப்பு முகாம், நாமக்கல் மோகனுார் சாலையில் உள்ள பழைய அரசு மருத்துவமனை வளாகத்தில், நேற்று நடந்தது. '108' ஆம்புலன்ஸ் சேலம் மண்டல மேலாளர் குமரன், நாமக்கல் மாவட்ட மேலாளர் சின்னமணி ஆகியோர் மேற்பார்வையில் நடந்தது. அதில், பி.எஸ்சி., நர்சிங், ஜி.என்.எம்., ஏ.என்.எம்., டி.எம்.எல்.டி., லைப் சயின்ஸ், பி.எஸ்சி., ஜூவாலஜி, பாட்டனி, பயோ கெமிஸ்ட்ரி, மைக்ரோபயாலஜி, பயோடெக்னாலஜி படித்த நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த, 50க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.இதில், '102' ஆம்புலன்ஸ் சுகாதார ஆலோசனை அதிகாரியாக, 2 பேரும், '108' ஆம்புலன்ஸ் மருத்துவ உதவியாளராக, 5 பேர் என, மொத்தம், 7 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ