உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / மாவட்ட அளவிலான ஜூடோ போட்டி பள்ளி மாணவியர் 75 பேர் பங்கேற்பு

மாவட்ட அளவிலான ஜூடோ போட்டி பள்ளி மாணவியர் 75 பேர் பங்கேற்பு

மாவட்ட அளவிலான ஜூடோ போட்டிபள்ளி மாணவியர் 75 பேர் பங்கேற்புநாமக்கல், நவ. 27-மாவட்ட அளவிலான பாரதியார் தின மற்றும் குடியரசு தின விளையாட்டு போட்டி நடந்து வருகிறது. அதன்படி, மாணவியருக்கான, 'ஜூடோ' புதிய விளையாட்டு போட்டி, நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், நேற்று நடந்தது. அதில், 14 வயதுக்கு உட்பட்ட மாணவியருக்கு, 7 எடை பிரிவும், 17 வயதுக்கு உட்பட்ட மாணவியருக்கு, 9 எடை பிரிவும், 19 வயதுக்கு உட்பட்ட மாணவியருக்கு, 9 எடை பிரிவுகளிலும் போட்டி நடத்தப்பட்டது.பள்ளி தலைமையாசிரியர் சீனிவாசராகவன் தலைமை வகித்தார். முதுகலை ஆசிரியர்கள் ஜெகதீசன், ஜெயராஜ், உடற்கல்வி இயக்குனர் செல்லம்மாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் காந்திமதி துவக்கி வைத்தார். போட்டியில், அரசு, அரசு உதவி பெறும், தனியார் பள்ளிகளை சேர்ந்த, 75 மாணவியர் பங்கேற்றனர். ஒவ்வொரு பிரிவிலும் முதல் மூன்று இடங்களை பெற்றவர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.இதற்கான ஏற்பாடுகளை, உடற்கல்வி ஆசிரியர்கள் சரவணன், அன்புச்செழியன் ஆகியோர் செய்திருந்தனர். இன்று (நவ., 27), மாணவர்களுக்கான ஜூடோ போட்டி நடக்கிறது. நாளை (நவ., 28), மாணவியருக்கு டேக்வாண்டோ போட்டியும், வரும், 29ல், மாணவருக்கு டேக்வாண்டோ போட்டியும் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை