அரசு பள்ளிகளில் 92.82 சதவீதம் தேர்ச்சி
நாமக்கல், தமிழகத்தில், பிளஸ் 2 பொதுத்தேர்வு கடந்த மார்ச், 3ல் தொடங்கி, 25ல் முடிந்தது. அதன் முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டது. நாமக்கல் மாவட்டத்தில், 89 அரசு பள்ளிகளை சேர்ந்த, 4,149 மாணவர்களும், 4,809 மாணவியரும் என மொத்தம், 8,958 பேர் தேர்வு எழுதினர். இதில், 3,721 மாணவர்கள், 4,577 மாணவியர் என மொத்தம், 8,298 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி சதவீதம், 92.63.மாவட்டத்தில், ஒரு ஆதிதிராவிட நலப்பள்ளியை சேர்ந்த மொத்தம், 74 பேர் தேர்வு எழுதினர். இதில், 68 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி சதவீதம், 91.89. நாமக்கல் மாவட்டத்தில், 5 பழங்குடியினர் நலப்பள்ளிகளை சேர்ந்த மொத்தம், 311 பேர் தேர்வு எழுதியதில், 306 பேர் தேர்ச்சி பெற்றனர். இது, 98.39 சதவீதம்.அதேபோல், ஒரு சமூக நலத்துறை பள்ளியை சேர்ந்த மொத்தம், 8 பேர் தேர்வு எழுதினர். அவர்களில், 7 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி சதவீதம், 87.5. மேலும் ஆறு அரசு உதவி பெறும் பள்ளிகளை சேர்ந்த, 544 பேர் தேர்வு எழுதியதில், 512 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி சதவீதம், 94.12. கடந்த, 2024ல், நாமக்கல் மாவட்ட அரசு பள்ளிகளில், 93.49 சதவீதம் தேர்ச்சி பெற்று, மாநில அளவில், 10ம் இடம் பிடித்தது. ஆனால், இந்த ஆண்டு, 0.67 சதவீதம் குறைவாக பெற்று, 92.82 சதவீதம் தேர்ச்சியுடன், மாநில அளவில், 15ம் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.