உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / மருதகாளியம்மன் கோவில் கும்பாபிஷேக விழாதீர்த்தக்குட ஊர்வலத்தில் திரளானோர் பங்கேற்பு

மருதகாளியம்மன் கோவில் கும்பாபிஷேக விழாதீர்த்தக்குட ஊர்வலத்தில் திரளானோர் பங்கேற்பு

மருதகாளியம்மன் கோவில் கும்பாபிஷேக விழாதீர்த்தக்குட ஊர்வலத்தில் திரளானோர் பங்கேற்புநாமக்கல்:நாமக்கல் அடுத்த பெரியூர் மருதகாளியம்மன் கோவில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு நடந்த தீர்த்தக்குட ஊர்வலத்தில், திரளான பக்தர்கள் பங்கேற்றனர். நாமக்கல் மாநகராட்சிக்குட்பட்ட, 8வது வார்டு பெரியூரில் பிரசித்திபெற்ற மருதகாளியம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவில், கொங்கு வேளாளர் சமூகத்தின் பண்ணை குலம் மற்றும் துாரன் குலத்தாருக்கு பாத்தியப்பட்டது. 28 ஆண்டுகளுக்கு பின், கோவிலில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன. வரும், 2 காலை, 9:45 மணிக்கு கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டது. இதையொட்டி, நேற்று காலை, மோகனுார் காவிரி ஆற்றில் நீராடி, 5,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் தீர்த்தக்குடம் எடுத்துக்கொண்டு யானை, குதிரை, நாட்டு மாடு, பசுவுடன் ஊர்வலமாக நாமக்கல் ஐயப்பன் கோவிலுக்கு வந்தனர். அங்கு தீர்த்தக்குடங்களுக்கு சிறப்பு பூஜை நடந்தது.பின், தீர்த்தக்குடங்களை எடுத்துக்கொண்டு, நாமக்கல் பழைய பஸ் ஸ்டாண்ட், மெயின் ரோடு, சேலம் சாலை கார்னர், திருச்செங்கோடு சாலை வழியாக சென்று பெரியூர் கோவிலை வந்தடைந்தனர். உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி, அறங்காவலர் குழு தலைவர் சந்திரமோகன், எம்.எல்.ஏ., ராமலிங்கம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.ஏற்பாடுகளை, திருக்கோவில் அறங்காவலர் குழு தலைவர் சந்திரமோகன், அறங்காவலர்கள் திருநாவுக்கரசு, பழனிவேலு, ராமசாமி, குமாரசாமி, திருப்பணி குழு தலைவர் பாலசுப்ரமணியன் உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை