உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / ஏரிக்கரைக்கு தடுப்பு சுவர் தேவை

ஏரிக்கரைக்கு தடுப்பு சுவர் தேவை

எருமப்பட்டி :எருமப்பட்டியில் இருந்து பவித்திரம் செல்லும் சாலையில், செல்லிபாளையம் மெயின் ரோட்டில் மிகப்பெரிய ஏரி உள்ளது. இந்த ஏரிக்கரையில் துறையூர் சாலை செல்வதால், தினமும் ஏராளமான கனரக வாகனங்கள், பஸ்கள், டூவீலர்கள் சென்று வருகின்றன. இதனால், இந்த சாலையில் அடிக்கடி மண் சரிவு ஏற்பட்டு குண்டும், குழியுமாக மாறி விடும். மேலும், இரவில் இப்பகுதியில் அடிக்கடி விபத்து நடந்து வரும் நிலையில், இந்த செல்லிபாளையம் ஏரிக்கரையின் ஒருசில இடத்தில் தடுப்பு சுவர் இல்லை. இதனால், வெளியூரில் இருந்து அதிவேகமாக வரும் வாகனங்கள், விபத்தில் சிக்குகின்றன.எனவே, இந்த செல்லிபாளையம் ஏரிக்கரையில் தடுப்பு சுவர் அமைக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !