உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / மந்தமான விசைத்தறி தொழில் உற்பத்தியாளர்கள் கவலை

மந்தமான விசைத்தறி தொழில் உற்பத்தியாளர்கள் கவலை

பள்ளிப்பாளையம் : பள்ளிப்பாளையம் சுற்று வட்டாரத்தில் முக்கிய தொழிலாக விசைத்தறி தொழில் உள்ளது. விசைத்தறியில் லுங்கி, சர்ட், வேட்டி, துண்டு, சேலை உள்ளிட்ட பல வகையான துணிகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இங்கு தயாரிக்கப்படும் துணிகள், இந்தியா முழுதும் விற்பனைக்கு செல்லும். தற்போது, விசைத்தறி தொழில் மிகவும் தொய்வு நிலையில் உள்ளதால் உற்பத்தியாளர்கள் கவலை அடைந்துள்ளனர்.இதுகுறித்து, நேரு நகரை சேர்ந்த உற்பத்தியாளர் சரவணன் கூறியதாவது: லோக்சபா தேர்தல் அறிவிக்கப்பட்டவுடன் துணி விற்பனை பாதிக்கப்பட்டது. இதனால் உற்பத்தி குறைந்தது. தேர்தல் முடிந்தவுடன், இரண்டு வாரம் விற்பனை அதிகரித்தது. இதனால் உற்பத்தி தீவிரமாக நடந்தது. தற்போது, மீண்டும் மந்த நிலைக்கு சென்றது. உற்பத்தி செய்த துணிகள் விற்பனை இல்லாமல் தேக்கமடைந்து விட்டதால், உற்பத்தியும் குறைந்து விட்டது. தேர்தல் முடிவுக்கு பின், மீண்டும் விற்பனை அதிகரிக்கும் என்ற நம்பிக்கையில் உள்ளோம்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ