உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / தலைமறைவு குற்றவாளி அக்., 13ல் ஆஜராக உத்தரவு

தலைமறைவு குற்றவாளி அக்., 13ல் ஆஜராக உத்தரவு

நாமக்கல், புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோவிலை சேர்ந்தவர் சிவா, 30. இவர் மீது, 2017ல், நாமக்கல் போலீஸ் ஸ்டேஷனில், இரண்டு திருட்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.இந்த வழக்கு விசாரணை, நாமக்கல் முதலாவது குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. ஆனால், சிவா வழக்கு விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாக இருந்து வருகிறார். அதனால், அவரை நீதிமன்றம் தேடப்படும் குற்றவாளியாக அறிவித்துள்ளது. வரும், அக்., 13ல், காலை, 10:00 மணிக்குள், அவர் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும். இல்லை என்றால், போலீசார் அவரை பிடித்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என, நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை