குமாரபாளையம் : பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவு, நேற்று வெளியானது. இதில், குமாரபாளையம் ரிலையன்ஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவி தர்ஷினி, 586 மதிப்பெண் பெற்று சாதனை படைத்தார். இதேபோல், மாணவி பிரியங்கா, 584 மதிப்பெண் பெற்று இரண்டாமிடம், மாணவி தர்ஷினி, மாணவர் சபரி ஆகிய இருவரும், 581 மதிப்பெண் பெற்று மூன்றாமிடம் பிடித்து சாதனை படைத்தனர்.கணிதம், 1, கணினி அறிவியல், 6, எலக்ட்ரானிக் கம்யூனிகேஷன், 2, வணிகவியல், 3, அக்கவுண்டன்சி, 2, பிஸினெஸ் கணிதம், 1, கம்ப்யூட்டர் அப்ளிகேஷன், 1, முறையே, 100க்கு, 100 மதிப்பெண்ள் பெற்றுள்ளனர். 580 மதிப்பெண்களுக்கு மேல், 4 பேர், 575க்கு மேல், 7 பேர், 550க்கு மேல், 11 பேர், 500க்கு மேல், 43 பேர், 440க்கு மேல், 90 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.சாதனை படைத்த மாணவர்களையும், அவர்களுக்கு உறுதுணையாக இருந்த ஆசிரியர்களையும், தாளாளர் ராமசாமி, செயலர் கோமதி, பொருளர் கந்தசாமி, முதல்வர் பிரின்சி மெர்லின் ஆகியோர் பாராட்டினர். தேர்வெழுதிய, 202 பேரில், 200 பேர் தேர்ச்சி பெற்றது குறிப்பிடத்தக்கது.