உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / கிரிப்டோ கரன்சி மோசடியில் தமிழக இளைஞர்கள் அரசு பதிவு பெற்ற முகவரிடம் விபரம் பெற அட்வைஸ்

கிரிப்டோ கரன்சி மோசடியில் தமிழக இளைஞர்கள் அரசு பதிவு பெற்ற முகவரிடம் விபரம் பெற அட்வைஸ்

நாமக்கல்: 'உயர் தொழில்நுட்ப கல்வி பயின்ற இளைஞர்களை மூளைச்சலவை செய்து, சுற்றுலா விசாவில் அழைத்து சென்று, 'கிரிப்டோ கரன்சி' மோசடி போன்ற சட்ட விரோத செயல்களில் கட்டாயப்படுத்துவதாக புகார் வந்துள்ளது. அவற்றை தவிர்க்க, அரசு பதிவு பெற்ற முகவர் மூலம் விபரம் தெரிந்து கொள்ள வேண்டும்' என, நாமக்கல் கலெக்டர் உமா தெரிவித்துள்ளார்.இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை:தமிழகத்தை சேர்ந்த பல்வேறு உயர் தொழில் நுட்ப கல்வி பயின்ற இளைஞர்களை, சமூக வலைதளம் மூலம் மூளைச்சலவை செய்து, கம்போடியா, தாய்லாந்து மற்றும் மியான்மார் நாட்டில் உள்ள தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில், 'டிஜிட்டல் சேல்ஸ் அண்ட் மார்கெட்டிங் எக்ஸிகியூட்டிவ்' 'தரவு உள்ளீட்டாளர்' வேலை, 'அதிக சம்பளம்' என்ற பெயரில், சுற்றுலா விசாவில் ஏமாற்றி அழைத்து சென்று, கால்-சென்டர் மோசடி மற்றும் கிரிப்டோ கரன்சி மோசடி போன்ற சட்ட விரோத செயல்களில் கட்டாயப்படுத்தி ஈடுபடுத்தப்படுவதாகவும், அவ்வாறு செய்ய மறுக்கும் நிலையில், அவர்கள் துன்புறுத்தப்படுவதாகவும் தொடர்ந்து புகார்கள் அரசுக்கு வருகின்றன.இதுபோன்ற சம்பவங்கள் நிகழாமல் இருக்க, வெளிநாடுகளுக்கு வேலை நிமித்தமாக செல்லும் இளைஞர்கள், அரசால் பதிவு செய்யப்பட்ட முகவர்கள் மூலம், வேலைக்கான விசா, முறையான பணி ஒப்பந்தம், என்ன பணி போன்ற விபரங்களை சரியாகவும், முழுமையாகவும் தெரிந்து கொள்ள வேண்டும். அவ்வாறான பணிகள் குறித்த விபரங்கள் தெரியவில்லை என்றால், தமிழக அரசின் 'அயலக தமிழர் நலத்துறை' அல்லது 'குடிபெயர்வோர் பாதுகாப்பு அலுவலர், சென்னை' அல்லது சம்பந்தப்பட்ட நாட்டில் உள்ள இந்திய துாதரகங்களை தொடர்பு கொண்டு, பணி செய்யப் போகும் நிறுவனங்களின் உண்மை தன்மையை உறுதி செய்து கொள்ள வேண்டும்.மேலும், இந்திய வெளியுறவு துறை மற்றும் வேலைக்கு செல்லும் நாடுகளில் உள்ள இந்திய துாதரகங்களின் இணைய தளங்களில் வெளியிடப்படும் அறிவுரைகளின் படியும் செயல்பட வேண்டும். அரசால் பதிவு செய்யப்பட்ட, அங்கீகரிக்கப்பட்ட முகவர்கள் விபரங்கள் www.emigrate.gov.inஎன்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம். மேலும், சென்னை குடிபெயர்வு அலுவலக உதவி எண், 90421 49222 மூலமாகவும், mea.gov.in, mea.gov.inஎன்ற மின்னஞ்சல் மூலமாகவும், சந்தேகங்களுக்கு விளக்கங்கள் பெறலாம்.வெளிநாடுகளில் உள்ள தமிழர்களுக்கு உதவிபுரிய, தமிழக அரசின், 'அயலகத் தமிழர் நலத்துறை' செயல்பட்டு வருகிறது. வெளிநாடு தமிழர்களுக்கு உதவி தேவைப்படின் இத்துறையின் கட்டணமில்லா, 24 மணி நேர அழைப்புதவி மையத்தின், 1800 309 3793, 80690 09901 மற்றும் 80690 09900 (மிஸ்டு கால் நெம்பர்) தொடர்பு எண்களை பயன்படுத்திக் கொள்ளலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை