நாமக்கல்லில் விடுபட்ட எஸ்.ஐ.ஆர்., படிவங்களை மீண்டும் வழங்க அறிவுரை
நாமக்கல்: நாமக்கல் தொகுதியில், விடுபட்ட வாக்காளர்களிடம் எஸ்.ஐ.ஆர்., படிவங்களை வழங்கி, பட்டியலில் சேர்ப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.நாமக்கல் மாநகராட்சி அலுவலக கூட்டரங்கில், விடுபட்ட வாக்காளர்களிடம் எஸ்.ஐ.ஆர்., படிவங்களை வழங்கி, மீண்டும் பட்டியலில் சேர்ப்பதற்கான ஆலோசனை கூட்டம், டி.ஆர்.ஓ., சரவணன் தலைமையில் நடைபெற்றது. ஆர்.டி.ஓ., சாந்தி, மாநகராட்சி கமிஷனர் சிவகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நாமக்கல் தொகுதிக்கு உட்பட்ட ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள், 50-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். கூட்டத்தில், நாமக்கல் தொகுதியில் இதுவரை எஸ்.ஐ.ஆர்., படிவங்களை பூர்த்தி செய்து கொடுக்காத வாக்காளர்களை கண்டறிந்து, அவர்களிடம் படிவங்களை வழங்கி மீண்டும் பட்டியலில் சேர்க்கவும், திருத்தங்கள் செய்வது, ஆவணங்கள் ஏதும் சமர்ப்பிக்காமல் இருந்தால் அவற்றை பெறுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என, அதிகாரிகள் அறிவுறுத்தினர்.