உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / 15 நாட்களுக்கு பின் மஞ்சள் ஏலம் துவக்கம்

15 நாட்களுக்கு பின் மஞ்சள் ஏலம் துவக்கம்

ராசிபுரம், அக். 23-நாமகிரிப்பேட்டையில், ஆர்.சி.எம்.எஸ்.,சிற்கு சொந்தமான மஞ்சள் மண்டி உள்ளது. இங்கு, வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை மஞ்சள் ஏலம் நடக்கிறது. அதுமட்டுமின்றி, 15க்கும் மேற்பட்ட தனியார் மண்டிகளிலும் மஞ்சள் ஏலம் நடக்கிறது. தொடர் மழை காரணமாக கடந்த வாரம் நடக்க இருந்த மஞ்சள் ஏலம் ரத்து செய்யப்பட்டது. தொடர்ந்து சில நாட்களாக வெயில் அடித்ததை அடுத்த மஞ்சள் அறுவடை தொடங்கியது. இதையடுத்து, 15 நாட்களுக்கு பின், நேற்று நாமகிரிப்பேட்டை ஆர்.சி.எம்.எஸ்.,சில் மஞ்சள் ஏலம் நடந்தது.நேற்று நடந்த ஏலத்தில் விரலி ரகம், 100 கிலோ மூட்டை குறைந்தபட்சம், 11,899 ரூபாய், அதிகபட்சம், 15,819 ரூபாய், உருண்டை ரகம் குறைந்தபட்சம், 10,599 ரூபாய், அதிகபட்சம், 13,022 ரூபாய், பனங்காலி ரகம் அதிகபட்சம், 6,799 ரூபாய்க்கு விற்பனையானது. 150 மூட்டை மஞ்சள், 9 லட்சம் ரூபாய்க்கு விற்பனையானது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி